Monday, May 20, 2024
Home > Cinema > சிவகார்த்திகேயனுக்கு ரொம்ப பில்டப் கொடுத்த விநியோகஸ்தர்… இப்போ அவருக்கே இவ்ளோ நஷ்டமா?

சிவகார்த்திகேயனுக்கு ரொம்ப பில்டப் கொடுத்த விநியோகஸ்தர்… இப்போ அவருக்கே இவ்ளோ நஷ்டமா?

சிவகார்த்திகேயன் நடித்த ப்ரின்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியனால் ரிலீஸ் செய்யப்பட்டது.

`

தொடர்ந்து டாக்டர், டான் ஆகிய திரைப்படங்களின் மூலம் வெற்றியைக் கொடுத்த சிவகார்த்திகேயனின் அடுத்தபடமாக கடந்த 21 ஆம் தேதி ரிலீஸானது பிரின்ஸ். இந்த படத்தின் மூலமாக அவர் முதல் முறையாக தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், மரியா, சத்யராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.

```
```

ஆனால் ரிலீஸுக்கு பின்னர் இந்த படம் ரசிகர்களை முற்றிலும் ஏமாற்றியுள்ளது. சுத்தமாக நகைச்சுவை காட்சிகள் எடுபடவில்லை என்று சொல்லும் ரசிகர்கள் விஜய் டிவியில் மதுரை முத்து செய்யும் நகைச்சுவை காட்சிகள் போல மொக்கையாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

தீபாவளி விடுமுறை நாட்களில் கூட இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு இல்லை. இதனால் இந்த படத்தின் மூலமாக படத்தை வெளியிட்ட அன்பு செழியனுக்கு 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் மற்றும் ரஜினி, விஜய்க்கு அடுத்து ரசிகர்களுக்கு பிடித்த நடிகராக சிவகார்த்திகேயன் உருவாகியுள்ளார் என்று பேசியது குறிப்பிடத்தக்கது.