தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி. தொடர்ந்து 7 சீசன்களாக நடந்து வரும் பிக்பாஸ் இந்த சீசனில் அவ்வளவாக சூடுபிடிக்கவில்லை. அதனால் செயற்கையாகவே பல பரபரப்புகளை உருவாக்கி வருகின்றனர். ஆரம்பத்தில் பவா செல்லத்துரையை அனைவரும் டார்கெட் செய்து வெளியேற்றியது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பிரதீப் ஆண்டனியை வெளியேறியது என சர்ச்சைகள் காரணமாக பிக்பாஸ் கவனம் பெற்று வருகிறது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி காட்டமான விமர்சனங்களை செய்துவரும் சுசித்ரா முன்பு மாயா ஒரு ஓரினச்சேர்க்கையாளர் எனக் கூறி சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து வரும் சுசித்ரா இப்போது பூர்ணிமாவை அவரை செயல் ஒன்றுக்காக கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த வாரம் பூர்ணிமா தன் வாழ்வில் நடந்த பூகம்பம் போன்ற சம்பவம் பற்றி பேசியிருந்தார். அதில் “நான் ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்தேன். ஆனால் 8 மாதம் கழித்து அவர்கள் என்னை அன்பிட் என சொல்லி வேலையை விட்டு நீக்கி விட்டார்கள். அதற்கு பிறகு நான் வேலை செய்த இடத்தில் 11 பசங்க. நான் ஒரே ஒரு பொண்ணு. நாங்கள் ஒரே இடத்தில் தங்கி இருந்தோம். வி பச்சா ர கேசில் சிக்கினேன். பின்னர் விசாரித்துவிட்டு போலீஸ் எங்களை விட்டுடுச்சு. ” என பேசியிருந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் கமல்ஹாசன், பூர்ணிமாவை சில கேள்விகள் கேட்டு, அவரின் குறைகளை சுட்டிகாட்டி பேசினார். அதில் இருந்து அம்மணி பயத்தில் உலாவி வருகிறார் பிக்பாஸ் வீட்டில் . இந்நிலையில் இந்த வாரம் ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா நடித்துள்ள பார்க்கிங் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அதன் ப்ரமோஷனுக்காக ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்கு வந்துள்ளனர்.
இந்துஜாவும், பூர்ணிமாவும் கல்லூரி காலத்தில் ஒன்றாக படித்தவர்கள். அந்த நட்பின் காரணமாக இந்துஜா பூர்ணிமாவிடம் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பூர்ணிமாவிடம் ஒருவார்த்தைக் கூட பேசவில்லை. இதனால் மனமுடைந்து சக பிக்பாஸ் போட்டியாளரான மாயாவிடம் அழுது புலம்பியுள்ளார் பூர்ணிமா.
அப்போது “நான் ஏற்கனவே ரொம்ப நொந்து போய் இருக்கேன். வெளியில் இருந்து வருபவர்கள் எனக்கு ஆதரவாக பேசினால் நன்றாக இருக்கும். ஆனால் என்னோட ஒன்னா படிச்ச இந்துஜா என் முகத்தக் கூட பாக்கல” என மிகவும் சோர்ந்து போய் பேசுகிறார்.
