Friday, August 21, 2026
Home > Cinema > பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வெற்றியைப் பெற்றது.  இந்த திரைப்படத்துக்கு கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து படம் பார்த்து சென்றனர்.  இதனால் முதல் 3 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் 200 கோடி ரூபாய் எட்டிய பொன்னியின் செல்வன், 6 நாட்களில் 300 கோடி ரூபாய் வசூலை எட்டியது. 12 நாட்களில் 400 கோடியும் , இதுவரை 450 கோடி ரூபாய்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இதையடுத்து இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் முதல் பாகத்தை வாங்கி வெளியிட வேண்டும் என ஆசைப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு அந்த ஆசை நிறைவேறாமல் இருந்தது.

ஆனால் இப்போது இரண்டாவது பாகத்தின் ரிலீஸை உதயநிதி கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.