Monday, April 20, 2026
Home > Cinema > துணிவு, வாரிசு ரெண்டு படத்துக்கும் ஸ்பெஷல் ஷோ கட்! திடீர் முடிவு!

துணிவு, வாரிசு ரெண்டு படத்துக்கும் ஸ்பெஷல் ஷோ கட்! திடீர் முடிவு!

துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களுக்கும் ஜனவரி 13 ஆம் தேதி முதல் ஸ்பெஷல் ஷோ அனுமதிக்கக் கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

விஜய் நடிக்கும் வாரிசு  படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் அதிக பட்ஜெட் கொண்ட படமாக வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.

இதே போல அஜித், மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனி தயாரித்துள்ள துணிவு திரைப்படமும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

துணிவு படம் ரிலீஸ் ஆகும் அதே நாளில்  வாரிசு படமும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் இந்த இரண்டு படங்களுக்கும் அதிகாலை, நள்ளிரவு ஸ்பெஷல் ஷோ காட்சிகள் திரையிடப்படுகின்றன.

ஆனால் அதற்கு அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு ஸ்பெஷல் ஷோ அனுமதி அளிக்கக் கூடாது எனத் தற்போது அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.