Wednesday, May 15, 2024
Home > Cinema > விஷால் எண்ட்ரியால் எக்ஸிட் ஆகும் பிரபலம்… தளபதி 67 படத்தில் நடிக்க தயங்கும் மிஷ்கின்!

விஷால் எண்ட்ரியால் எக்ஸிட் ஆகும் பிரபலம்… தளபதி 67 படத்தில் நடிக்க தயங்கும் மிஷ்கின்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. அதற்கு முன்பாகவே விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார்.

`

தளபதி 67 படம் டிசம்பர் மாதம் மூனாறில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் வில்லன்களாக நடிக்க சஞ்சய் தத் மற்றும் இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

```
```

இந்த படத்தில் சஞ்சய் தத், நிவின் பாலி, விஷால், கௌதம் மேனன் மற்றும் மிஷ்கின் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இப்போது மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்குக் காரணம் விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக அவரோடு நடிக்க தயங்குவதாக சொல்லப்படுகிறது.