Friday, June 5, 2026
Home > Cinema > இவ்ளோ நாள் ஷூட் பண்ணியும் இன்னும் பாதி படம் கூட முடியலயா?… சிவகார்த்திகேயனின் மாவீரன் அப்டேட்!

இவ்ளோ நாள் ஷூட் பண்ணியும் இன்னும் பாதி படம் கூட முடியலயா?… சிவகார்த்திகேயனின் மாவீரன் அப்டேட்!

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அபாரமான நகைச்சுவை பேச்சாற்றாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் நுழைந்தார். முதலில் நகைச்சுவை வேடத்தில் நடித்த அவர் அதன் பின்னர் கதாநாயகனாகி வெற்றிப் படங்களைக் கொடுத்தார். அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

இதையடுத்து தீபாவளிக்கு ரிலீஸ் ஆன அவரின் பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த படத்துக்குப் பிறகு அவர் மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த பட இயக்குனர் அஸ்வினோடு இப்போது சிவகார்த்திகேயனுக்கு கருத்து வேறுபாடு எழுந்து ஷூட்டிங் சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயன் படமாக்கலில் தலையிட்டு காட்சிகளை மாற்றும்படி கூறுவதுதான் இந்த மோதலுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

அதன் பின்னர் சமாதானம் ஏற்ப்ட்டு ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் 60 நாட்களுக்கு மேல் ஷூட்டிங் முடிந்தாலும், இன்னும் படம் 50 சதவீதம் கூட முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் இந்த படத்தின் ஷூட்டிங் நடக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.