Sunday, May 19, 2024
Home > Cinema > ஆஹா ஒன்னு விடாம தோண்டுறாங்களே… பல பிரபலங்களை ஆபாசமாக திட்டிய பிரதீப் ரங்கநாதன்!

ஆஹா ஒன்னு விடாம தோண்டுறாங்களே… பல பிரபலங்களை ஆபாசமாக திட்டிய பிரதீப் ரங்கநாதன்!

2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி. இந்த படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா, யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். 90ஸ் கிட்ஸ்களைப் பெரிதும் கவர்ந்த இந்த திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

`

இப்போது அவரே கதாநாயகனாக நடித்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். கடந்த நவம்பர் 4 ஆம் தேதி வெளியான இந்த படம் வசூலில் சக்க போடு போட்டு வருகிறது. வெளியாகி 10 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. இதுவரை முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியவை. முதல் முறையாக புதுமுகங்கள் நடித்த படம் இந்த சாதனையைப் படைத்துள்ளது.

```
```

இதையடுத்து இளைஞர்களின் மத்தியில் பிரதீப் பிரபலமாகியுள்ளார். இதையடுத்து அவரது சமூகவலைதளப் பக்கங்கள் ஆராயப் படுகின்றன. இந்நிலையில் அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமா பிரபலங்களான விஜய், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சச்சின் ஆகியோரை அநாகரிகமாகவும், ஆபாசமாகவும் விமர்சித்துள்ள பதிவுகள் கண்ணில் பட, பலரும் அதை ஸ்க்ரின் ஷாட் எடுத்து பரப்ப, இப்போது பிரதீப் தன்னுடைய கணக்குகளை முடக்கிவிட்டு சமூகவலைதளங்களில் இருந்து வெளியேறியுள்ளார்.