பொன்னியின் செல்வன் ஹிட்… ரஜினிக்காக லதா போட்ட தூண்டில்… வைரலாக பரவும் தகவல்!
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றி இயக்குனர் மணிரத்னத்தின் பழைய பிரபலத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது.
இயக்குனர் மணிரத்னம் நீண்ட ஆண்டுகளாக வணிக ரீதியாக ஒரு மிகப்பெரிய வெற்றிக்காக காத்திருந்தார். கடைசியாக அவ்ர் படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்றது 2000 ஆம் ஆண்டு வெளியான அலைபாயுதே திரைப்படம்தான். அதன் பிறகு வெளியான படங்கள் விமர்சன ரீதியாக நல்ல பெயரைப் பெற்றாலும், வசூலில் கலக்கவில்லை.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் அவருக்கு நிறைவான ஒரு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது. தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவுப்படம் பொன்னியின் செல்வன். அதை ஏற்கனவே எம் ஜி ஆர் மற்றும் கமல் ஆகியோர் படமாக்க முயன்று கைவிட்டு விட்டனர். இயக்குனர் மணிரத்னமே கூட சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் மற்றும் மகேஷ் பாபுவை வைத்து தொடங்கி பின்னர் கைவிட்டார்.
ஒருவழியாக இப்போது இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த படம் இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் மழையைக் கொட்டி வருகிறது. 3 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாம். இதனால் இன்னும் சில நாட்களில் விக்ரம் திரைப்படத்தின் வசூலைக் கடந்துவிடும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான் பொன்னியின் செல்வன் ரிலீஸுக்குப் பிறகு ரஜினிக்காக ஒரு படத்தை மணிரத்னம் இயக்க வேண்டும் என ரஜினிகாந்தின் மனைவி முயற்சி செய்து வருவதாக ஒரு தகவல் தீயாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரவி வருகிறது.
