Monday, July 6, 2026
Home > Cinema > யாராவது தவறாக நடந்துகொண்டால் நான் இதைதான் செய்வேன்… கீர்த்தி சுரேஷ்!

யாராவது தவறாக நடந்துகொண்டால் நான் இதைதான் செய்வேன்… கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல் பற்றி பேசியுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ்.இந்த படத்தில் இவரின் நடிப்பின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் 2013 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான கீதாஞ்சலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகா குமாரின் மகள். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில்  உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.இவர்குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார்.பின்னர் இவர் பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தார்.

அடுத்தடுத்து நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகி இருக்கும் இவர் இப்போது அடுத்த நயன்தாரா என சொல்லப்படும் அளவுக்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளார். இந்நிலையில் சினிமாவில் நடிகைகள் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாவது குறித்து பேசியுள்ளார்.

அதில் “இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் எனக்கு நடந்ததில்லை. அப்படி யாராவது என்னிடம் அனுகினால் நான் அந்த வாய்ப்பை உதறிவிடுவேன். சினிமாவை விட்டு வேறு வேலைக்கு செல்வதற்கும் நான் தயங்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.