Friday, May 3, 2024
Home > Cinema > வலிமை நடிகை சைத்ரா நடிக்கும் கயல் சீரியலில் நடக்கும் முக்கிய மாற்றம்!

வலிமை நடிகை சைத்ரா நடிக்கும் கயல் சீரியலில் நடக்கும் முக்கிய மாற்றம்!

சன் டிவியின் மிக முக்கியமான சீரியல்களில் ஒன்று கயல் சீரியல். அந்த சீரியலின் டாப் 3 டி ஆர் பி சீரியல்களில் ஒன்று.

சன் தொலைக்காட்சி இன்றும் நம்பர் 1 தொலைக்காட்சி சேனலாக இருப்பதற்கு அந்த சேனலின் சீரியல்கள் மிக முக்கியக் காரணம். மற்ற சேனல்கள் எவ்வளவோ சீரியல்களை புகுத்தினாலும், சன் டிவியை நெருங்க முடியவில்லை.

`

அப்படி சன் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் கயல். இதில் நாயகியாக வலிமை படத்தில் பிரபலம் ஆன சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். தொடரின் முக்கியக் கதாபாத்திரமாக இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

```
```

இந்த சீரியலில் சைத்ராவுக்கு ஜோடியாக மற்றொரு பிரபல சீரியல் நடிகையான ஆல்யா மானசாவின் கணவர் சஞ்சீவ் ‘எழில்’ என்ற வேடத்தில் நடித்து வந்தார். கயல் மற்றும் சஞ்சீவ் காதல் நிறைவேறுமா என்ற கட்டத்தை இப்போது சீரியல் எட்டியுள்ள நிலையில், இப்போது சீரியலில் இருந்து சஞ்சீவ் விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏனென்றால் சஞ்சீவின் மனைவி ஆல்யா இப்போது புதிதாக நடிக்க தொடங்கியுள்ள இனியா தொடரில் சஞ்சீவ் நடிக்க உள்ளதால் கயல் தொடரில் இருந்து விலக உள்ளதாக சொல்லப்படுகிறது.