Thursday, May 21, 2026
Home > Cinema > கமல்ஹாசனோடு இணையும் அஜித் பட இயக்குனர்… இன்று மாலை வெளியாகும் அப்டேட்!

கமல்ஹாசனோடு இணையும் அஜித் பட இயக்குனர்… இன்று மாலை வெளியாகும் அப்டேட்!

இயக்குனர் ஹெச் வினோத் அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்க வெளியாகியுள்ளன.

அஜித் – ஹெச் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து இப்போது துணிவு படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த படம் சமீபத்தில் தாய்லாந்தில் இறுதிகட்ட ஷூட்டிங்கை முடித்துள்ளனர். அதையடுத்து படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மற்றும் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளன. துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.

இதையடுத்து ஹெச் வினோத், கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் கமல்ஹாசன் நடிப்பாரா இல்லை வேறு நடிகர்கள் நடிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் கமல் அடுத்து மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக வினோத் இயக்கும் படத்தின் அப்டேட்  இன்று மாலை கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் பரவி வருகின்றன.