Monday, May 20, 2024
Home > Cinema > சூர்யா 42 படத்தில் நடிகராக இணைந்த பிரபல இயக்குனர்…!

சூர்யா 42 படத்தில் நடிகராக இணைந்த பிரபல இயக்குனர்…!

சூர்யா 42 படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.

நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோர் இணைந்து படம் பண்ணுவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் சிறுத்தை சிவா தொடர்ந்து அஜித் படங்களை இயக்கியதால் இந்த கூட்டணி தாமதம் ஆனது.

`

இப்போது இருவரும் இணைந்து ‘சூர்யா 42’ என தற்காலிகமாக அழைக்கப்படும் படத்தில் இணைந்துள்ளனர். இந்த படம் 10 இந்திய மொழிகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  திஷா பட்டாணி கதாநாயகியாக நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் கோவாவில் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இந்த படம் நிகழ்காலத்தில் நடப்பது போலவும், பிளாஷ் பேக்கில் பல நூறாண்டுகளுக்கு முன்பு நடப்பது போலவும் இரண்டு கதைக்களன்களைக் கொண்டது என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

```
```

கே எஸ் ரவிக்குமார் இப்போது பல படங்களில் நடிகராக நடிக்க தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.