தமிழ் சினிமாவில் தான் வளர்ந்து வந்த காலகட்டத்தில் ஜோதிகாவும் சூர்யாவும் காதலில் விழுந்தனர். இருவரும் சில படங்களில் இணைந்து நடித்து வந்த போதே காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் காதலுக்கு சூர்யாவின் தந்தையான சிவகுமார் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்பட்டது.
இதனால் சூர்யா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டலில் தங்கியதாக சொல்லப்பட்டது. அதன் பின்னர் திரையுலகை சேர்ந்த சிலர் அவரை சமாதானப்படுத்தி திருமணத்துக்கு ஒத்துக்கொள்ள வைத்ததாக அப்போது ஒரு தகவல் வெளியானது.
திருமணத்துக்குப் பின்னர் சினிமாவில் ஒரு பெரிய இடைவெளி எடுத்துக்கொண்டார் ஜோதிகா. இனிமேல் அவர் நடிக்கமாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென மீண்டும் சினிமாவில் ரி எண்ட்ரி கொடுத்தார். ஆனால் இது சிவகுமாருக்கு பிடிக்கவில்லை என கிசுகிசுக்கள் எழுந்தன.
ஆனால் ஜோதிகா தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். அந்த படங்களை சூர்யாவே தயாரித்தும் வந்தார். இந்நிலையில் திடீரென சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியினர் மும்பையில் குடியேறியுள்ளனர். இதற்கு சிவகுமார்தான் காரணம் என்றெல்லாம் சொலல்ப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்போது ஜோதிகா அளித்துள்ள ஒரு நேர்காணலில் இதுபற்றியெல்லாம் விரிவாக பேசியுள்ளார். அதில் “இந்த விஷயங்களை நான் தெளிவுபடுத்தியாக வேண்டும். எங்கள் வீட்டில் எனக்கு மிகவும் சப்போர்ட்டாக இருந்ததே சிவகுமார் அப்பாதான். சமீபத்தில் நான் நடித்த காதல் திரைப்படத்தை அவரது நண்பர்களுக்கு போட்டுக்காட்டி ரசித்தார்.
எனது திருமணம் ஆனதில் இருந்து 15 வருடங்கள் சென்னையில்தான் இருந்தேன். கொரோனா காலத்தில் எனது பெற்றோருக்கு உடல் நலம் குன்றியது. அவர்களைக் கவனித்துக்கொள்ள அடிக்கடி போய் வரமுடியவில்லை. அதனால் தற்காலிகமாக இப்போது மும்பையில் குடியேறியுள்ளோம். விரைவில் சென்னைக்கு திரும்புவோம்.
மற்றபடி எங்கள் வீட்டில் பிரச்சனை, அதனால்தான் நாங்கள் மும்பைக்கு சென்றோம் என சொல்வதெல்லாம் வெறும் வதந்திதான்” எனக் கூறியுள்ளார்.
