Thursday, June 4, 2026
Home > Cinema > ஓரின சேர்க்கைக்கு பெண்களை மாயா இப்படிதான் தன் வலையில் விழவைப்பார்… பாடகி சுசித்ரா கிளப்பிய பகீர்!

ஓரின சேர்க்கைக்கு பெண்களை மாயா இப்படிதான் தன் வலையில் விழவைப்பார்… பாடகி சுசித்ரா கிளப்பிய பகீர்!

மாயா சுந்தர கிருஷ்ணன் ஒரு இந்திய நடிகை, விளம்பர நடிகை மற்றும் தமிழ் திரையுலகின் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் கல்லூரி இசைத் திரைப்படமான வானவில் வாழ்க்கை (2015) திரைப்படத்தில் அறிமுகமானார். மாயா தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் பிறந்தார். இவர் மதுரை டிவிஎஸ் லட்சுமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் பெங்களூரு அம்ரிதா பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார்.

ஜேம்ஸ் வசந்தனின் வானவில் வாழ்க்கையில் அறிமுகமானபோது, மாயா நாடகத்திலிருந்து திரையுலகிற்கு நகர்ந்தார், “டிவாய்ட் ஆப் எக்ஸைட்மென்ட்” மற்றும்  மற்றும் “எ வேஸ்டட் எபோர்ட்” என்ற நாடகக்ங்களில் ஒரு பாடகராக நடிப்பதற்கு தனது முடியை வெட்ட வேண்டியிருந்தது. தொடரி படத்தில் பத்திரிகை நிருபராக நடித்தார், மேலும் துருவ நட்சத்திரம், 2.0, மகளிர் மட்டும் மற்றும் சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் விக்ரம் மற்றும் லியோ ஆகிய படங்களில் அவரின் கதாபாத்திரம் கவனம் ஈர்த்தது. தற்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் அவரை பற்றி பிரபல மாடல் அனன்யா ராம்பிரசாத் சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை பாலியல் ரீதியாக புகார் கூறியது இப்போது வைரல் ஆகிவருகிறது.

இதுபற்றி அனன்யா “நான் என்னுடைய 18 ஆவது வயதில்மாடலிங்கில் நுழைந்த போது எனக்கு வழிகாட்டியாக மாயா இருந்தார். எனக்கு நல்ல அறிவுரைகளை  வழங்கினார். ஆனால் ஒரு கட்டத்தில் என்னை என் நண்பர்களிடம் இருந்து பிரித்து அவருடன் மட்டும்தான் பழகவேண்டும் என்ற நிலைக்கு தள்ளினார்.

என் எல்லா முக்கியமான முடிவுகளையும் அவரே எடுத்து என்னை முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டார். என்னை பாலியல் ரீதியாக படுக்கையில் சீண்டியுள்ளார். எனக்கு தவறான எண்ணத்தில் முத்தம் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் நான் தவறான ஆளுடன் இருப்பதை உணர்ந்து அவரிடம் இருந்து விலகிவிட்டேன்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது பாடகி சுசித்ரா, மாயா எப்படி பெண்களை தன் வலையில் விழவைத்து அவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார் என்பது பற்றி பேசியுள்ளார். அதில் “தன்னுடன் பழகும் பெண்களை மிகவும் தாழ்வாக உணரவைத்து அவர்களுடைய நண்பர்களிடம் பல பொய்களை சொல்லி அவரை வெறுக்கும்படி செய்துவிடுவார்.

அதன் பின்னர் அவருக்கு தான்மட்டும்தான் ஒரே தோழி என்ற மனநிலையை உருவாக்கிவிடுவார்.  இந்த அடிமைத் தனத்தை பாதிக்கப்பட்ட பெண்கள் தாமதமாகதான் உணர்ந்து கொள்வார்கள். கொஞ்ச நாள் கழித்து தனக்கு லெஸ்பியன் உறவு பிடிக்கவில்லை, இனிமேல் நான் ஆண்களுடன் உறவில் இருக்கப் போகிறேன் என சொல்லி அவர்களை கழட்டிவிட்டுவிடுவார்” எனக் கூறியுள்ளார். மேலும் இந்த தகவல்களை எல்லாம் தனக்கு சம்மந்தப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்களே தெரிவித்துள்ளனர் எனக் கூறியுள்ளார்.