ஸ்டுடியோ கிரீன் (Studio Green) என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படமாக அமைந்த சில்லுனு ஒரு காதல் படத்தினை தயாரித்து தயாரிப்பாளராக அறிமுகமாகியவர் ஞானவேல் ராஜா.
இப்படத்தினை தொடர்ந்து பருத்திவீரன், சிங்கம், சிறுத்தை, மெட்ராஸ், இன்று நேற்று நாளை, கொம்பன், டார்லிங் 2, மிஸ்டர் லோக்கல், பத்துதலபோன்ற மிகப்பெரிய படங்களில் தயாரித்து பிரபலமானார். மாஸ் படங்களை தாண்டி இறைவி போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.
தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் தங்கலான், கங்குவா படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பருத்திவீரன் படத்தில் இயக்குனர் அமீர் செய்த அயோக்கியத்தனத்தை புட்டுபுட்டு வைத்துள்ளார் ஞானவேல் ராஜா.
2 கோடி பட்ஜெட்டில் எடுத்த பருத்திவீரன் படத்தின் கணக்கை தயாரிப்பாளர் சங்கம் கேட்டனர். அந்த கணக்கை காட்டும் விசயத்தை போலி கணக்கை எழுதி கொடுத்தார். உண்மையாக ஆன செலவை விட பல மடங்கு அதிகமாக செலவு காட்டுவார் அமீர். திருடுவது தான் அவருக்கு வேலை உழைக்கிறதுலாம் கிடையாது. என்கிட்ட மட்டும் திருடுனது இல்லை, பல தயாரிப்பாளரிடம் திருடி இருக்கிறார் என்று ஓப்பனாக கூறியிருக்கிறார்.
இவரின் இந்த திமிர்த்தனமான பேச்சால் அமீரின் நண்பர்களான கரு பழனியப்பன், சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் உள்ளிட்டவர்கள் பொங்கி எழுந்தனர். ஞானவேல் ராஜாவுக்கு எதிராக கடுமையான அறிக்கைகளை வெளியிட்டனர். இதனால் சைலண்ட் மோடுக்கு சென்றார் ஞானவேல் ராஜா.
இந்நிலையில் இப்போது அமீருக்கு தரவேண்டிய தொகையை தருவதற்கு ஞானவேல் ராஜா சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அமீரின் நண்பர்களான வெற்றிமாறன் மற்றும் கரு பழனியப்பன் மூலமாக பிரச்சனையை தீர்த்துக்கொள்ள இறங்கி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அவர்களோ அப்போதைய 80 லட்சத்துக்கான இன்றைய மதிப்பாக 10 கோடி ரூபாய் வரை கேட்டு 5 கோடி ரூபாயில் வந்து நிற்கிறார்களாம். இது சூர்யா தரப்புக்கு ஷாக் கொடுத்துள்ளதாம். ஆனால் அமீர் தரப்போ தனக்கு தரவேண்டிய 80 லட்சம் ரூபாயை மட்டும் கொடுத்தால் போதுமென சொல்ல, ஆனால் அவரின் நண்பர்கள் அன்றைய மதிப்பு வேறு, இன்றைய மதிப்பு வேறு என சொல்கிறார்களாம்.
