Tuesday, September 22, 2026
Home > Cinema > அஜித்தோடு துணிவு படத்துல நடிச்சிருக்கேன் நண்பர்களே… ஜி பி முத்து பகிர்ந்த சீக்ரெட்!

அஜித்தோடு துணிவு படத்துல நடிச்சிருக்கேன் நண்பர்களே… ஜி பி முத்து பகிர்ந்த சீக்ரெட்!

நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார்.. இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பொங்கலுக்கு இந்த படம் விஜய்யின் வாரிசு திரைப்படத்தோடு வெளியாக உள்ளது.

இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ள நிலையில் பல சின்னத்திரை நடிகர்களும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் டிக்டாக் மூலமாக பிரபலம் ஆகி, இப்போது சினிமாக்களில் நடிக்க தொடங்கியுள்ள ஜிபி முத்து இந்த படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளதாக சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.