Saturday, April 18, 2026
Home > Cinema > சினிமாவில் கால்பதிக்கும் தோனி…. விரைவில் வரப்போகும் சூப்பர் அறிவிப்பு!

சினிமாவில் கால்பதிக்கும் தோனி…. விரைவில் வரப்போகும் சூப்பர் அறிவிப்பு!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி விரைவில் சினிமாவில் தயாரிப்பாளராகக் களமிறங்க உள்ளார்.

இந்திய அணிக்கு பல ஐசிசி உலகக்கோப்பைகளை பெற்றுத்தந்தவர் முன்னாள் கேப்டன் தோனி. கபில்தேவுக்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர் சிறந்த ஒரு கேப்டனாக செயல்பட்டார். அதே போல அவர் கேப்டனாக செயல்பட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் 4 முறை கோப்பையைப் பெற்றுத் தந்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல்  தொடரிலும் அவர் கேப்டனாக செயல்பட உள்ளார்.

ஏற்கனவே தோனியின் வாழ்க்கை வரலாறு திரைபடமாக எடுக்கப்பட்டு 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. இந்நிலையில் இப்போது தோனி சினிமாவில் தயாரிப்பாளராகக் களமிறங்க உள்ளார். தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தை தொடங்க உள்ள அவர் தமிழ், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்களை தயாரிக்க உள்ளார். இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. தமிழில் தோனி தயாரிக்கும் முதல் படத்தில் நயன்தாரா நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.