Friday, May 17, 2024
Home > Cinema > 20 வருஷ சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக அந்த வேடம்… ஹெச் வினோத் படத்தில் தனுஷ்!

20 வருஷ சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக அந்த வேடம்… ஹெச் வினோத் படத்தில் தனுஷ்!

அஜித் – ஹெச் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து இப்போது துணிவு படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த படம் சமீபத்தில் தாய்லாந்தில் இறுதிகட்ட ஷூட்டிங்கை முடித்துள்ளனர். அதையடுத்து படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மற்றும் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளன. துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.

`

இதையடுத்து ஹெச் வினோத், கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் தன்னுடைய தயாரிப்பில் யோகி பாபுவை வைத்து ஒரு படம் எடுக்க உள்ளார்.

```
```

இந்நிலையில் துணிவு படத்தை முடித்ததும், ஹெச் வினோத் உடனடியாக தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷ் முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.