Saturday, September 26, 2026
Home > Cinema > வயசான ஐஸ்வர்யா ராயை இளமையான நந்தினியாக மாற்றியது இப்படிதான்… வெளிவந்த தகவல்!

வயசான ஐஸ்வர்யா ராயை இளமையான நந்தினியாக மாற்றியது இப்படிதான்… வெளிவந்த தகவல்!

நடிகை ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி வேடத்தில் நடித்துள்ளார்.

ஒருவழியாக இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பதாலும், இந்தியா முழுவதும் ப்ரமோஷன் பணிகள் நடந்ததாலும், படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது. 6 நாட்களில் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது. இந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களின் எல்லா வசூல் சாதனைகளையும் முறியடிக்கும் என சொல்லப்படுகிறது.

படத்தின் மிகப்பெரிய பலமாக கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட நடிகர்கள் தேர்வு சிலாகிக்கப்படுகிறது. மணிரத்னம் ஒவ்வொரு முறை இந்த படத்தை எடுக்கலாம் என முடிவு செய்யும்போதும் அதற்கேற்றார் போல சில நடிகர்களைத் தேர்வு செய்வார். ஆனால் எல்லாமுறையும் நந்தினி கதாபாத்திரத்துக்கு மட்டும் ஐஸ்வர்யா ராயைத் தவிர வேறு யாரையும் அவர் தேர்வு செய்யவில்லை. ஐஸ்வர்யா ராயை இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தியவர் மணிரத்னம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இளமையான நந்தினியின் முகத்தோற்றத்துக்கு தற்போது ஐஸ்வர்யா ராயின் தோற்றம் செட்டாகவில்லை. அதனால் வயதைக் குறைத்துக் காட்டும் டி ஏஜிங் என்ற தொழில்நுட்பம் மூலமாக ஐஸ்வர்யா ராயை இளமையாக மாற்றியுள்ளனர். இந்த தொழில்நுட்பம் ஹாலிவுட்டில் பல படங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விக்ரம் திரைப்படத்தில் கூட இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார்கள். ஆனால் படத்தில் அந்த காட்சிகள் இடம்பெறவில்லை.