தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி. தொடர்ந்து 7 சீசன்களாக நடந்து வரும் பிக்பாஸ் இந்த சீசனில் அவ்வளவாக சூடுபிடிக்கவில்லை. அதனால் செயற்கையாகவே பல பரபரப்புகளை உருவாக்கி வருகின்றனர். ஆரம்பத்தில் பவா செல்லத்துரையை அனைவரும் டார்கெட் செய்து வெளியேற்றியது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பிரதீப் ஆண்டனியை வெளியேறியது என சர்ச்சைகள் காரணமாக பிக்பாஸ் கவனம் பெற்று வருகிறது.
ஆனால் ப்ரதிப் வெளியேற்றப்பட்ட பின்னர் ஜோவிகா “நாங்கள் அப்படி எதுவுமே சொல்லவில்லை. கமல்சார்தான் அப்படி சொல்லி ப்ரதிப்புக்கு ரெட் கார்ட் கொடுத்தார்.” எனப் பேசியுள்ளார். இந்நிலையில் மீண்டும் ப்ரதீப் பிக்பாஸ் வீட்டுக்குள் திரும்ப உள்ளார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவும் இப்போது வரை தெரியவில்லை.
இப்போது பிக்பாஸ் இறுதிகட்டத்தை நெருங்கிவரும் வேளையில் போட்டியாளர்கள் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது. கடந்த வாரம் கூல் சுரேஷ் எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து அவர்களுக்கான அட்வைசை வழங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில் டைட்டில் வின்னராக அர்ச்சனா வருவார் என ரசிகர்கள் பெரியளவில் எதிர்பார்க்கிறார்கள். அதே போல அவரும் மக்களிடம் 40 சதவீத வாக்குகளை வாங்கியுள்ளார். அவருக்கு அடுத்த இருக்கும் மணி மற்றும் தினேஷ் ஆகியோர் 20 சதவீத வாக்குகளைக் கூட வாங்கவில்லை. ஆனால் விஜய் டிவி பிக்பாஸ் டைட்டிலை அர்ச்சனாவுக்குக் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

அவருக்கு பதிலாக மணி அல்லது மாயாவை டைட்டில் வின்னராக விஜய் டிவி அறிவிக்க முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ரசிகர்கள் இப்போதே விஜய் தொலைக்காட்சி மீது அதிருப்தியில் உள்ளனர்.
இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே மாயாவை எப்படியாவது வின்னர் ஆக்கிவிடவேண்டும் என வேலைகள் நடப்பதாக தெரிகிறது. சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சில பக்கங்களை மாயா ஆதரவாளர்கள் தொடர்பு கொண்டு மாயாவுக்கு ஆதரவாக போஸ்ட் போட சொல்லி கேட்டுள்ளனர். மேலும் அதற்காக பணம் தரவும் தயாராக இருப்பதாக பேரம் பேசியுள்ளனர். இது சம்மந்தமான பதிவுகள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.
