Monday, June 29, 2026
Home > Cinema > ஜெய்க்கு இருந்த அந்த பழக்கம் … அதனால்தான் பிரிந்து சென்றாரா அஞ்சலி?

ஜெய்க்கு இருந்த அந்த பழக்கம் … அதனால்தான் பிரிந்து சென்றாரா அஞ்சலி?

நடிகை அஞ்சலி இவர் 1986 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தவர் 2006 ஆம் ஆண்டு போட்டோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் அடுத்த ஆண்டு கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆந்திராவில் முடித்த இவர் கல்லூரி படிப்பை சென்னையில் படித்தார் . கணிதத்தில் பட்டம் பெற்ற இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் குறும்படங்களில் நடிக்க துவங்கினார்.

பல முயற்சிகளுக்கு பிறகு இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. கற்றது தமிழ் படம் வெற்றிபெற்ற பிறகு தொடர்ந்து ஆயுதம் செய்வோம், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களில் நடித்தார் . தொடர்ந்து வாய்ப்புகள் குவியவே அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட அஞ்சலி பல படங்களில் நடித்தார் தொடர்ந்து தமிழ் தெலுங்கு , மலையாளம் கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர்.

இதுவரை 50 படங்களில் நடித்துள்ளார் அஞ்சலி. ஒரு கதாநாயகியாக இத்தனை படங்களில் நடிப்பது சாதாரணம் இல்லை. ஆனால் அஞ்சலிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு இவருக்கு வாய்ப்புகள் குறையவே இன்ஸ்டாகிராமில் பக்காவான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

பிஸியாக வந்துகொண்டிருந்த அஞ்சலி இடையில் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து காணாமல் போனார். அதற்குக் காரணம் அவரும் ஜெய்யும் காதலித்து வருவதாகவும், அதனால் சினிமாவை மறந்து இருவரும் ஒன்றாக சுற்றி வருவதாகவும் சொல்லப்பட்டதுதான்.

மிகத் தீவிரமாக காதலித்த இருவரும் கல்யாணம் செய்துகொண்டு செட்டில் ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இருவரும் பிரிந்தனர். இந்த பிரிவுக்குக் காரணம் ஜெய்க்கு இருந்த குடிப்பழக்கம்தான் காரணம் என சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் வெளிப்படுத்தியுள்ளார்.

இருவரும் ஒன்றாக இருந்த போது அருகருகே ப்ளாட் வாங்கி அதில் ஒன்றாக குடியேற இருந்ததாகவும், ஆனால் நாளுக்கு நாள் அதிகமான ஜெய்யின் குடிப்பழக்கம் காரணமாக போதும்டா சாமி என இடத்தைக் காலிபண்ணி விட்டதாக சொல்லப்படுகிறது.