தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் தமன்னா.இவர் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா, சுறா, வீரம், தேவி 2, ஆக்ஷன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார்.

பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் கல்லூரி படம்தான். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதே போல தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழில் தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக இவருக்கு தமிழில் அதிகளவில் படங்கள் இல்லாததால் மற்ற மொழிப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் இப்போது அவர் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் அவர் இந்தியில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 மற்றும் ஜி கர்தா ஆகிய வெப் தொடர்களில் கவர்ச்சியின் உச்சத்தைத் தொட்டு நடித்திருந்தார். அப்போதுதான் அவருடன் நடித்த சக பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவோடு அவர் காதலில் விழுந்தார். இப்போது அவர்கள் இருவரும் பாலிவுட்டின் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர்.

இந்நிலையில் தான் கிளாமராக நடிப்பதை தன்ஞுடைய காதலர் விஜய் வர்மாவே ரசித்துதான் பார்த்தார் என தமன்னா பேசியுள்ளதாக சினிமா கிசுகிசு மன்னன் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் சொல்லியுள்ளார். மேலும் ‘தமன்னா ஒரு வெப் சீரிஸில் ஆடையின்றி நடித்ததைதான் அவர் காதலர் ரசித்திருப்பார் போல’ எனவும் பரபரப்பைக் கிளப்பும் விதமாகப் பேசியுள்ளார்.