அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.
பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் வலிமை படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றினர்.
இப்போது மூன்றாவது முறையாக துணிவு படத்தில் இணைந்துள்ளனர். நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் பிக்பாஸ் ஆமீர் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. துணிவு படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி வெளியிடுகிறது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பல ஆண்டுகளாக கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் பெரிய படங்களின் உரிமையைக் கைப்பற்றுவதே இல்லை. இந்நிலையில் அஜித்தின் துணிவு படத்தைக் கைப்பற்றி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு முன்பு அஜித்தின் பில்லா, அசல் ஆகிய படங்கள் கலைஞர் தொலைக்காட்சியால் கைப்பற்றப்பட்டுள்ளன.

