Monday, May 20, 2024
Home > Cinema > 11 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் மங்காத்தா டீம்… லேட்டஸ்ட் தகவல்!

11 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் மங்காத்தா டீம்… லேட்டஸ்ட் தகவல்!

நடிகர் அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.

நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பொங்கலுக்கு இந்த படம் விஜய்யின் வாரிசு திரைப்படத்தோடு வெளியாக உள்ளது.

`

இதையடுத்து லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

```
```

இதையடுத்து அஜித் நடிக்க உள்ள படத்தை தயாரிக்க மங்காத்தா படத்தின் தயாரிப்பாளர் துரை தயாநிதி ஆசைப்படுகிறாராம். மங்காத்தா படத்தின் போதே மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றலாம் என பேசிக்கொண்டார்களாம். அதையடுத்து அஜித்தோடு இது சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடக்கிறதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் அஜித், அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடித்து முடித்ததும், சுமார் இரண்டு ஆண்டுகள் திடமிட்டு உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்கு இரு சக்கரவாகனத்தில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.