அஜித்தை வைத்து தொடர்ந்து 3 படங்களை தயாரித்துள்ளார் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர்.
பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் வலிமை படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றினர்.
இப்போது மூன்றாவது முறையாக துணிவு படத்தில் இணைந்துள்ளனர். நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் பிக்பாஸ் ஆமீர் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில் பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்துக்குப் பிறகு போனி கபூர் தமிழில் படங்கள் தயாரிக்க போவதில்லை என்றும் மீண்டும் பாலிவுட்டுக்கே சென்றுவிட போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால்தான் அவருடன் இணைந்து பணியாற்றிய ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்ற தயாரிப்பாளர்களோடு இணைந்து இப்போது படத்தை தயாரித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
