Saturday, April 18, 2026
Home > Cinema > அஜித் மகள் அனோஷ்கா இவ்ளோ பெரிய ஆளா ஆயிட்டாரா… வைரல் புகைப்படம்!

அஜித் மகள் அனோஷ்கா இவ்ளோ பெரிய ஆளா ஆயிட்டாரா… வைரல் புகைப்படம்!

நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பொங்கலுக்கு இந்த படம் விஜய்யின் வாரிசு திரைப்படத்தோடு வெளியாக உள்ளது.

இதையடுத்து அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK 62 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ஒன்றரை ஆண்டுகாலம் உலக சுற்றுலா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக அஜித் சமூகவலைதளங்கள், பொதுத் தளங்களில் தலைகாட்டுவதில்லை. இந்நிலையில் இப்போது அஜித் குடும்பத்தில் இருந்து அவரின் மனைவி ஷாலினி அஜித் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் புத்தாண்டைக் கொண்டாட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அஜித்தின் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அனோஷ்கா குழந்தையாக இருக்கும் போது நிறைய புகைப்படங்கள் வெளியாகின. ஆனால் இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாக இருக்கும் இந்த போட்டோ ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.