Wednesday, October 7, 2026
Home > Cinema > நாங்களும் இப்படி சின்ன ட்ரஸ் போடுவோம்… அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்!

நாங்களும் இப்படி சின்ன ட்ரஸ் போடுவோம்… அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்!

நடிகை அதிதி ஷங்கர் மாடர்ன் உடையில் எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

விருமன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் அதிதி ஷங்கர். இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகளான அதிதி மருத்துவப் படிப்பை முடித்தவர். ஆனால் நடிப்பின் மேல் உள்ள ஆர்வம் காரணமாக நடிப்பில் இறங்கினார்.

கார்த்தி நடிப்பில் சூர்யா தயாரித்த விருமன் திரைப்படம், அவருக்கு நடிகையாக நல்ல அறிமுகத்தைத் தந்தது. அடுத்து அவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடிக்கிறார். முன்னணி இயக்குனரின் வாரிசு என்பதால் முதல் இரண்டு படங்களுமே முன்னணி நடிகர்களோடு நடிக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது.

இந்நிலையில் இதுவரையில் ஹோம்லியான உடைகளில் மட்டுமே தோன்றி புகைப்படங்களை வெளியிட்டு வந்த அதிதி ஷங்கர், இப்போது மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன.