Thursday, April 16, 2026
Home > Cinema > பக்கா ஸ்டைலிஷ் போஸில் வாணி போஜன்… லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!

பக்கா ஸ்டைலிஷ் போஸில் வாணி போஜன்… லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை வாணி போஜன்.இவர் 1988 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பிறந்தார்.

இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு கிங்பிஷர் ஏர்லைன்ஸில் பணிப்பெண்ணாக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார்.பின்னர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர் மாடலிங், விளம்பரங்களில் நடித்து வந்தார்.

பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.பிறகு இவருக்கு சன் டிவியில் தெய்வமகள் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.இந்த சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

ஓ மை கடவுளே வெற்றிக்குப் பிறகு பிரபல கதாநாயகி பல படங்களில் நடித்து வருகிறார். அடுத்து பரத்துடன் இணைந்து மிரள் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

மற்ற நடிகளைப் போல இல்லாமல் வாணி போஜன் சேலை உடுத்தி புகைப்படங்கள் வெளியிடுவதை விரும்புவர். இந்நிலையில் மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.