தமிழில் உத்தமபுத்திரன் படத்தின்மூலம் கவனம் பெற்ற நடிகை சுரேகா வாணி. அதில் பெரிய குடும்பத்தின் மருமகளாக அவர் நடித்திருப்பார். அவர் கதாபாத்திரம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் ஹோம்லியாக உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் அவர் நிஜத்தில் அவர் ஹோம்லியான கேரக்டர் இல்லையாம்.

படுமாடர்ன் உடையணிந்து கில்மா போஸ்கள் கொடுத்து இணையத்தை தெறிக்கவிட்டுக் கொண்டிருப்பவர். அவருக்கு கல்யாண வயதில் ஒரு மகள் இருக்க, அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தும் ஆகிவிட்டது.
ஆந்திராவை பூர்விகமாகக் கொண்ட இவர் தெலுங்கு படங்களில்தான் அதிகமாக நடித்து வருகிறார். அங்கு சமீபத்தில் தயாரிப்பாளர் ஜே பி சௌத்ரி என்பவர் போதை பொருள் வழக்கில் கைதானார். அவரோடு சுரேகா வாணி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாக, இவரையும் போதை பொருள் வழக்கில் இணைத்து கிசுகிசுக்கள் எழுந்தன.
அதற்கு உடனடியாக பதிலளித்த சுரேகா வாணி, தன்னைப் பற்றி வேண்டுமென்றே இதுபோல தேவையற்ற அவதூறுகள் பரப்பப்படுவதாக கொந்தளித்தார்.

இந்நிலையில் 46 வயதாகும் அவரை திருமணம் செய்துகொள்ள அங்கு ஏகபோட்டி சில நடிகர்களுக்குள் நடக்கிறதாம். அதில் ஒரு நடிகரை திருமணம் செய்துகொள்ள அவரும் சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. தன்னுடைய மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அந்த நடிகர் யார் என்பது இன்னும் வெளியுலகுக்கு தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல் சுரேகாவைப் பற்றி இதற்கு நேர்மாறான ஒரு தகவலும் பரவி வருகிறது. அது என்னவென்றால் கல்யாண வயதில் மகள் இருக்கும்போது நமக்கெதுக்கு தேவையில்லாமல் இப்போது கல்யாணம் என அவர் நினைத்து கல்யாணமே வேண்டாம் என சொல்லிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

எது எப்படியோ இந்த சர்ச்சைகளால் கடந்த சில வாரங்களாக புகழ் வெளிச்சத்தில் மிதந்து வருகிறார் சுரேகாவாணி. தமிழ் நாட்டு ரசிகர்களுக்கு அவரின் இன்ஸ்டா புகைப்படங்கள் மட்டுமே ஒரே ஆறுதல்
