Friday, June 5, 2026
Home > Cinema > இப்பவும் புன்னகை இளவரசிதான்… சினேகாவின் லேட்டஸ்ட் ஸ்மைல் கிளிக்ஸ்!

இப்பவும் புன்னகை இளவரசிதான்… சினேகாவின் லேட்டஸ்ட் ஸ்மைல் கிளிக்ஸ்!

தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என புகழப்படுபவர் சினேகா. 2000 களில் பல முன்னணி நடிகர்களோடு நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் சினேகா. அவர் நடித்த விரும்புகிறேன், வசூல் ராஜா, புதுப்பேட்டை என ஏராளமான படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. அவரின் அறிமுகப் படமாக சுசி கணேசன் இயக்கிய விரும்புகிறேன் திரைப்படம் அமைந்தது.

Actress sneha

அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்த போது சக நடிகரான பிரசன்னா மீது காதல் வயப்பட்டார். பின்னர்  பிரசன்னாவை மணந்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. பிரசன்னாவை மணப்பதற்கு முன்னர் வேறு ஒரு நடிகரோடு காதலில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. தமிழ் சினிமாவின் ஸ்டார் தம்பதிகளாக இப்போது இருவரும் வலம் வருகின்றனர்.

Actress sneha

சினேகாவின் தனித்தன்மை அவரி கிளா மர் ரோல்களை தேர்ந்தெடுக்காமல் பெரும்பாலும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்ததுதான். அப்படி ஹோம்லியான வேடங்களில் நடித்த அவர் புதுப்பேட்டை உள்ளிட்ட சில படங்களில் மட்டும் கவர்ச்சியாக நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தார். ஆனால் அந்த வேடத்திலும் அவர் தன்னுடைய சிறந்த நடிப்பைக் கொடுத்திருந்தார்.

திருமணத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகிய அவர் இப்போது சீரியல், சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் இப்போதும் அவரை 90ஸ் கிட்ஸ்களை கவரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

Actress sneha

இந்நிலையில் சமூகவலைதளங்களில் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு வரும், இப்போது மீண்டும் பழைய புன்னகை இளவரசியாக இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. இப்போது சேலை அணிந்து தன்னுடைய ட்ரேட் மார்க் புன்னகையோடு அவர் கொடுத்துள்ள போஸ்கள் 90ஸ் கிட்ஸ்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

Actress sneha