தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். 90 களின் இறுதியில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் சிம்ரன். விஜய், அஜித், சூர்யா மற்றும் கமல் என பல முன்னணி நடிகர்களோடு நடித்தார்.

கிளாமர் வேடங்கள் மற்றும் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் என இரண்டிலும் கலந்துகட்டி கலக்கியவர் சிம்ரன். நடன இயக்குனர் ராஜு சுந்தரம், நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் எஸ் ஜே சூர்யா ஆகியோரோடு காதல் கிசுகிசுக்களில் சிக்கியவர்.

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பல மொழிப் படங்களில் நடித்து வந்த அவர் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும்போதே யாரும் எதிர்பார்க்காத வகையில் டெல்லியை சேர்ந்த தொழிலதிபரை மணந்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.

இதையடுத்து குழந்தைகள் எல்லாம் பிறந்த பின்னர் இப்போது ரி எண்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போதைய கதாநாயகிகளுக்கு சவால் விடும் விதமாக அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

ரி எண்ட்ரியில் தன்னுடைய முதல் இன்னிங்ஸில் ஜோடியாக நடிக்காத ரஜினிக்கு ஜோடியாக பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்போது சப்தம் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துவரும் அவரின் 90ஸ் இளைஞர்களை கதறவிட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…



