Monday, May 20, 2024
Home > Cinema > ஆத்தி… கொஞ்சம் பயமாதான் இருக்கு.. குரூரமான மேக்கப்பில் ஸ்ருதிஹாசனின் க்ளிக்ஸ்

ஆத்தி… கொஞ்சம் பயமாதான் இருக்கு.. குரூரமான மேக்கப்பில் ஸ்ருதிஹாசனின் க்ளிக்ஸ்

தமிழ் சினிமாவில் 1992  ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் நடித்த தேவர்மகன் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ஸ்ருதிஹாசன்.இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அந்த படத்திலும் பின்னர் ஹேராம் படத்திலும் பாடல்களையும் அவர் பாடி இருந்தார்.

Shruthi haasan

பின்னர் இந்தியில் லக் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழில், 2011 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் ஆம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஸ்ருதி ஹாசன். இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கி இருந்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

`
Shruthi haasan

கமல்ஹாசன் சரிகா தம்பதியினரின் மூத்த மகளாக ஸ்ருதிஹாசன் இவர் 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.பின்னர் தனது கல்லூரி படிப்பை மும்பையில் உளவியலில் துறையில் படித்து முடித்தார். பின்னர் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள இசைக் கல்லூரியில் இசை கற்றுக் கொண்டார்.

Shruthi haasan

இவர் 2009 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான உன்னை போல் ஒருவன் படத்திற்கு இசை அமைத்தார். இவர் முதன் முதலில் தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடினார்.

```
```

இவர் நடிகை, பாடகி, இசையமைப்பாளர் போன்ற பல திறமைகளை கொண்டுள்ளார்.பின்னரீ இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பிறகு பூஜை , புலி, வேதாளம் என பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் படத்தில் நடித்திருந்தார்.

Shruthi haasan

தமிழை விட தெலுங்கில் அவருக்கு நல்ல வாய்ப்புகள் வரத்தொடங்கின. தற்போது தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் ஸ்ருதி.

Shruthi haasan

இந்நிலையில் வித்தியாசமான மேக்கப்போடு அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.