Saturday, May 11, 2024
Home > Cinema > பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் போவது… அதுக்கு அப்புறம் இப்படி பன்னா என்ன… ரேகா நாயர் பளீர் பதில்!

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் போவது… அதுக்கு அப்புறம் இப்படி பன்னா என்ன… ரேகா நாயர் பளீர் பதில்!

இரவின் நிழல் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரேகா நாயர். அவர் இறந்து கிடக்க அவர் மார்பில் பாலுக்காக ஒரு குழந்தை வந்து அழுதுகொண்டிருப்பது போன்ற காட்சியில் அவர் நடித்திருந்தார். அந்த காட்சி குறித்து பிரபல விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் மோசமாக விமர்சித்திருந்தார்.

அதையடுத்து பயில்வான் பீச்சில் வாக்கிங் போகும்போது அவரிடம் சண்டையிட்டு அந்த வீடியோவை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றார் ரேகா. அதன் பின்னர் கவனிக்கப்படும் நடிகையான அவர் இப்போது தான் கொடுத்துள்ள ஒரு நேர்காணலில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது பற்றி தன்னுடைய கருத்தை வெளிப்படையாக தெரிவித்து வைரலாகியுள்ளார்.

சமீபத்தில் ஒரு யுடியூப் சேனலில் அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசும்போது “வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைப்பது சினிமா துறையில் மட்டும் இல்லை. எல்லாத் துறையிலும் உள்ளது. ஆனால் சினிமாவில் அப்பட்டமாக தெரிந்து விடுகிறது. பல நடிகைகள் வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துகொண்டால் ஐபோன் வாங்கலாம், ஈசிஆரில் வீடு வாங்கலாம் என அதற்கு ஒத்துக் கொள்கிறார்கள்.

`

என்னை யாராவது வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் அந்த நபரை பிடித்தால் சம்மதித்து விடுவேன். அவரை பிடிக்காத பட்சத்தில் போகமாட்டேன். தினமும் 4 மணி நேரம் வொர்க் அவுட் செய்து உடம்பை அழகாக பேணுகிறேன். அந்த உடம்புக்கு எத்தனை கோடி தருவ எனக் கேட்பேன்.  அவனால் கொடுக்க முடியாது. அதனால் மூடிகிட்டு போய்டுவான். இப்படிதான் தைரியமாக இவன்களை எதிர்கொள்ளனும். பயந்துகிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது” எனக் கூறியிருந்தார்.

```
```

இந்நிலையில் இப்போது பெண் நடிகைகள் பாலியல் தொல்லை பற்றி பேசுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் “பட வாய்ப்புக்காக யாராவது படுக்கைக்கு அழைத்தால் சென்றுவிட்டு, பட வாய்ப்பையும் பெற்றுவிட்டு, லட்ச லட்சமாக சம்பளம் வாங்கிக் கொண்டு 10 வருஷம் கழிச்சு பட வாய்ப்பு இல்லாத போது நான் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என சொல்வதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.

உங்களை படுக்கைக்கு அழைத்த போதே நீங்கள் நியாயத்துக்காக போராடி இருக்க வேண்டும். அப்போது விட்டுவிட்டு மார்க்கெட் போன பின்னர்தான் இப்படியான விஷயங்களை சொல்கிறீர்கள். படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகள் யாருமே இது போன்ற புகார்களைக் கூறவில்லை” எனக் கூறியுள்ளார்.