பாடகி சின்மயி சமீபத்தில் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார். அதையடுத்து சமீபத்தில் அந்த குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி பாடகி சின்மயி. 13 வயதில் இருந்து பாடல்கள் பாடி வரும் சின்மயி, தேசிய விருதையும் வென்றார். பல முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பாடல் ஆசிரியர் வைரமுத்துவின் மீது அவர் பாலியல் அத்துமீறல் புகாரைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இது சம்மந்தமாக சின்மயிக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், அவருக்கு எதிராக வைரமுத்துவுக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் கருத்துகளைக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயான சின்மயி, அவரின் இரட்டைக் குழந்தைகளின் புகைப்படத்தை சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டார். அதில் நிறைய ரசிகர்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்திருந்தனர். ஆனால் அதில் ஒரு நபர் வந்து “வைரமுத்து சாருக்கு வாழ்த்துகள்” என்று ஆபாசமாக கமெண்ட் செய்ய, சின்மயி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதையடுத்து சின்மயி “நான் இதனால் தான் என்னுடைய கர்ப்பகால புகைப்படங்களை வெளியிடவில்லை. இப்போது என்னிடம் தவறாக நடந்தவரே என் குழந்தைக்கு அப்பாவாக்கி விட்டார்கள். நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்கதான். ரத்தத்துலயே ஊர்னது. வளர்ப்பும் அப்படிதான்” எனக் கூறியுள்ளார்.
