தமிழ் சினிமாவில் தீரன், ஸ்பைடர் மற்றும் என் ஜி கே ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ரகுல்ப்ரீத் சிங். அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரித் சிங். தமிழில் அவர் நடித்த தீரன் அத்தியாயம் 1 மற்றும் என் ஜி கே ஆகிய படங்கள் அவரை முன்னணி நடிகையாக்கின.

இடையில் போதைப் பொருள் சம்மந்தப்பட்ட வழக்கில் சிக்கி சர்ச்சைகளை சிக்கிய அவர், பாலிவுட் படங்களில் மட்டும் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். ஆனாலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலமாக தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார்.

இப்போதைக்கு சொல்லிக்கொள்ளும் படி எந்த படமும் இல்லாத நிலையில் இன்ஸ்டாகிராமில் வரிசையாக தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கருப்பு நிற உடையில் கிறக்கமான கண்களோடு அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.





