Saturday, April 18, 2026
Home > Cinema > நல்லவனென்று நம்பி ஒரு மோசமானவனை காதலித்தேன்… தனது முதல் காதல் குறித்து பேசிய பிரியா பவானி சங்கர்!

நல்லவனென்று நம்பி ஒரு மோசமானவனை காதலித்தேன்… தனது முதல் காதல் குறித்து பேசிய பிரியா பவானி சங்கர்!

சின்னத்திரை நடிகைகளுக்கு சினிமா கதவுகள் அவ்வளவு எளிதாக திறக்காது. ஆனால் சமீபகாலத்தில் அந்த மாய பிம்பம் உடைந்து வருகிறது. அதை முதலில் உடைத்தவர் பிரியா பவானி சங்கர். விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வந்த அவர் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியவர்.

நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான்  திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியா பவானி சங்கர்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பிரியா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் மற்றும் சின்னத்திரை தொடர்களில் தனது வாழ்க்கையை  தொடங்கினார்.இதன் மூலம் வாய்ப்புகளை தேடி வந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் ஹீரோயினாக நடித்தார். அதன் மூலம் பரவலான கவனத்தைப் பெற்ற இவர் டிவியில் தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரையில் நடிகையாக இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஹீரோயினாக வெற்றி பெற்றார்.

சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இப்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரளாகி உள்ளது. பொதுவாக ஹோம்லியான லுக்கிலேயே தனது புகைப்படங்களை இவர் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் கிழக்குக் கடற்கரை சாலையில் பிரியா பவானி சங்கர் பலகோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களா ஒன்றையும், வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றையும் வாங்கினார். அந்த பங்களாவில் தன்னுடைய காதலர் ராஜவேலுவுடன் அவர் குடியேறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் ராஜவேலுவுகு முன்னர் தனக்கு ஏற்பட்ட முதல் காதல் குறித்து பேசியுள்ளார். அதில் “நான் நல்லவன் என்று நம்பி ஒரு மோசமானவனோடு உறவில் இருந்தேன். அவனோடு எப்படி காலம் முழுவதும் வாழ்வது என பயந்தேன். ஒரு கட்டத்தில் அந்த உறவில் இருந்து வெளியேறிய பின்னர்தான் ராஜவேலுவை சந்தித்து காதலில் விழுந்தேன்” எனக் கூறியுள்ளார்.

அதுபோல ராஜவேலுவும் ஏற்கனவே ஒரு பெண்ணைக் காதலித்து பிரேக் அப் செய்துகொண்ட பின்னரே என்னை சந்தித்தார் எனக் கூறியுள்ளார். இருவரும் பிரியா பவானி சங்கரின் திரைப்பட வாய்ப்புகளுக்காக இப்போது வரை திருமனம் செய்துகொள்ளாமல் லிவிங் டு கெதராக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.