Saturday, April 18, 2026
Home > Cinema > ஹோம்லி க்யூன் பிரியா பவானி சங்கரின் ஸ்டன்னிங் க்யூட் புகைப்படங்கள்!

ஹோம்லி க்யூன் பிரியா பவானி சங்கரின் ஸ்டன்னிங் க்யூட் புகைப்படங்கள்!

நடிகை பிரியா பவானி சங்கர் 2017 ஆம் ஆண்டு நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரையில் நடிகையாக இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஹீரோயினாக வெற்றி பெற்றார்.

இவர் 1989 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தார்.இவர் முதன் முதலில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார்.பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் ஹீரோயினாக நடித்தார். பின்னர் மேயாத மான் படத்தில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், மாயா போன்ற படங்களில் நடித்தார்.

சின்னத்திரை நடிகைகளுக்கு சினிமா கதவுகள் அவ்வளவு எளிதாக திறக்காது. ஆனால் சமீபகாலத்தில் அந்த மாய பிம்பம் உடைந்து வருகிறது. அதை முதலில் உடைத்தவர் பிரியா பவானி சங்கர். விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வந்த அவர் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியவர்.

சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இப்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரளாகி உள்ளது. பொதுவாக ஹோம்லியான லுக்கிலேயே தனது புகைப்படங்களை இவர் பகிர்ந்து வருகிறார்.