சின்னத்திரை நடிகைகளுக்கு சினிமா கதவுகள் அவ்வளவு எளிதாக திறக்காது. ஆனால் சமீபகாலத்தில் அந்த மாய பிம்பம் உடைந்து வருகிறது. அதை முதலில் உடைத்தவர் பிரியா பவானி சங்கர். விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வந்த அவர் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியவர்.

நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியா பவானி சங்கர்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பிரியா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் மற்றும் சின்னத்திரை தொடர்களில் தனது வாழ்க்கையை தொடங்கினார்.இதன் மூலம் வாய்ப்புகளை தேடி வந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் ஹீரோயினாக நடித்தார். அதன் மூலம் பரவலான கவனத்தைப் பெற்ற இவர் டிவியில் தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரையில் நடிகையாக இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஹீரோயினாக வெற்றி பெற்றார்.
சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இப்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரளாகி உள்ளது. பொதுவாக ஹோம்லியான லுக்கிலேயே தனது புகைப்படங்களை இவர் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் கிழக்குக் கடற்கரை சாலையில் பிரியா பவானி சங்கர் பலகோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களா ஒன்றையும், வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றையும் வாங்கினார். படத்துக்கு இன்னமும் 30 லட்ச ரூபாய் அளவுக்கு மட்டுமே சம்பளம் வாங்கும் பிரியா எப்படி பலகோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவை வாங்கினார் என்பது குறித்து கிசுகிசு மன்னன் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் “செய்தி வாசிப்பாளராக ரசிகர்களைக் கவர்ந்த பிரியாவின் கால்ஷீட்டை வாங்க தயாரிப்பாளர் ஒருவர், இயக்குனரை கதை சொல்ல அனுப்பியுள்ளார். அந்த இயக்குனர் அவரிடம் சம்மதம் வாங்க படாத பாடு பட்டுள்ளார். அந்த தயாரிப்பாளர் பிரியா பவானி சங்கர்தான் வேண்டும் என்று சொல்ல காரணம் பைனான்சியர் ஒருவர் பிரியா பவானி சங்கர் நடித்தால் பைனான்ஸ் பண்ணுகிறேன் எனக் அந்த தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார். அதன் பின்னர் அந்த படம் எடுக்கப்பட்டு ரிலீஸானது.
இப்போது வரை 30 லட்சம் ரூபாய் அளவுக்குதான் சம்பளம் வாங்கும் பிரியா பவானி சங்கர் எப்படி பல கோடி ரூபாய் மதிப்பில் பங்களா வாங்கினார் என நீங்களும் கேட்காதீர்கள்.. நானும் கேட்க மாட்டேன். ஏனென்றால் அதெல்லாம் பெரிய இடத்து விவகாரம்” எனக் கொளுத்திப் போட்டுள்ளார்
