நிவேதா பெத்துராஜ் தனது சமீபத்தைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகியுள்ளார்.

நடிகை நிவேதா பெத்துராஜ் 1991 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். சில காலம் பள்ளி படிப்பை தமிழகத்தில் படித்த இவர் பின்னர் தனது பெற்றோருடன் துபாய் சென்றுவிட்டார்.

10 ஆண்டுகள் துபாயில் பெற்றோருடன் இருந்து பள்ளி படிப்பை முடித்த இவர். பின்னர் இங்கிலாந்தில் கல்லூரி படிப்பை முடித்தார் . பின்னர் 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அந்த திரைப்படம் ஓரளவு வெற்றி பெறவே தொடர்ந்து இவருக்கு பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது . அதன் பின்னர் சில திரைப்படங்களில் நடித்த இவர் ஜெயம் ரவியுடன் நடித்த டிக் டிக் டிக் திரைப்படம் வெற்றி திரைப்படமாக மாறியது.

தற்போது இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் . தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடித்த பல படங்கள் தெலுங்கில் வெற்றி பெற்று வருகின்றன.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நிவேதா பெத்துராஜ் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்படி அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் வைரலாக ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.


