Thursday, April 16, 2026
Home > Cinema > இந்த வேலைக்கு வர நாங்க என்ன பண்ணனும்!! மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கமன்ட் செய்யும் ரசிகர்கள்!!

இந்த வேலைக்கு வர நாங்க என்ன பண்ணனும்!! மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கமன்ட் செய்யும் ரசிகர்கள்!!

பிரபல நடிகையான மாளவிகா மோகனன் மலையாளம் மற்றும் தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார். தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான்.  அதற்கு முன்பே ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.

Actress malavika mohanan

ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கிய பியாண்ட் த க்ளவுட்ஸ் திரைப்படம்தான். அதில் ஏழ்மையால் தவிக்கும் ஒரு பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா. அந்த படம் மாளவிகாவுக்கு உலக அளவில் புகழ்பெற்று தந்தது. ஆனாலும் அவருக்கு பாலிவுட்டில் அடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Actress malavika mohanan

இடையில் முன்னணி நடிகையான  நயன்தாராவின் மேக்கப் மற்றும் நடிப்புப் பற்றியும், லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் ஆகியவை பற்றி சர்ச்சையில் சிக்கினார். பின்னர் நான் நயன்தாராவை தவறாக எதுவும் சொல்லவில்லை எனக் கூறி சமாளித்தார். தற்போது மலையாளப் படங்கள் மற்றும் இசை ஆல்பம் என தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

Actress malavika mohanan

இன்ஸ்டாகிராமிலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் குவிந்துள்ளது. அதற்குக் காரணம் அவர் வெளியிடும் புகைப்படங்கள்தான். சமீபத்தில் தன்னை விட 9 வயது குறைந்த இளைஞனைக் காதலிக்கும் வயது முதிர்ந்த பெண்ணாக நடித்திருந்தார். அந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படம் தற்போது ஓடிடியில் ரிலீஸாகி அதிக பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது.

Actress malavika mohanan

இதையடுத்து பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். இதற்கிடையில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Actress malavika mohanan