ஜான்வி கபூர் இவர் 1997 ஆம் ஆண்டு நடிகை ஶ்ரீ தேவி மற்றும் பிரபல தயாரிப்பாளார் போனி கபூருக்கு மகளாக பிறந்தார். இவர் இப்போது பாலிவுட் திரையுலகின் முக்கிய கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார்.

இந்தியா முழுவதும் கலக்கிய நடிகையான ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பின்னர் 2018 ஆம் ஆண்டு தடக் என்ற ரீமேக் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் மராத்திய சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சாய்ராட் படத்தின் ரீமேக்.இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஜீ சினி விருதினை வென்றார் ஜான்வி கபூர்.

விரைவில் ஜான்வி கபூர், தென்னிந்திய சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளார். ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் கொரட்டாலா சிவா நடிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படம் பேன் இந்தியா ரிலீஸாக உருவாகி வருகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்போது நடிகை ஜான்வி கபூர் பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். இவர் தயாரிப்பாளர் போனி கபூருக்கும்,மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் மூத்த மகளாக பிறந்தார். இவரையும் தன்னை போலவே பாலிவுட்டில் ஹீரோயினாக்க வேண்டும் என ஆசைப்பட்டார் ஸ்ரீதேவி. இவர் நெட் ஃபிளிக்ஸில் என்ற ஓடிடி தளம் தயாரித்த கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஜானகி போரிடம் தற்போது A.I தொழில்நுட்பத்தின் உதவியுடன் யார் வேண்டுமானாலும் ஒரு நடிகையின் முகத்தை வைத்து மோசமான வீடியோக்களை உருவாக்க முடிகிறது.

இந்த மாதிரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல நடிகைகள் முகத்தை எடுத்து மோசமான வீடியோக்களை உருவாக்கி வருகின்றனர். இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.
என்னுடைய புகைப்படங்களை எடுத்து என்னுடைய முகத்தை எடுத்து மோசமான வீடியோக்களில் வைத்து கேவலமான வீடியோக்களை எல்லாம் இணையத்தில் அப்லோடு செய்கிறார்கள்.மோசமாக சித்தரித்து அதனை மோசமான பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
இதில் கொடுமை என்னவென்றால் சிறு வயதில் நான் என் அப்பாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மோசமாக எடிட் செய்திருக்கிறார்கள். என்னுடைய ஆண் நண்பருடன் பொட்டு துணி இல்லாமல் இருப்பது போல எடிட் செய்துள்ளார்கள்.

அந்த புகைப்படங்கள் இப்போதும் அப்படியான வலைத்தளங்களில் இருக்கிறது. இது தொடர்பாக நான் சைபர் கிரைம் மற்றும் போலீசில் புகார் கொடுத்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் ஜான்விகபூர்.
