Sunday, May 12, 2024
Home > Cinema > உடம்போடு பசை போட்டு ஒட்டி இருப்பாங்களோ… நடிகை ஹூமா குரேஷியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

உடம்போடு பசை போட்டு ஒட்டி இருப்பாங்களோ… நடிகை ஹூமா குரேஷியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஹூமா குரேஷி காலா மற்றும் வலிமை ஆகிய படங்களின் மூலாமக தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர்.

பாலிவுட் முன்னணி நடிகையான ஹூமா குரேஷி இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்தின் மூலம் பிரபலம் ஆனார். அதைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த அவர் தனது தனித்துவமான நடிப்புக்காக பாராட்டப்படுபவர்.

`

2018 ஆம் ஆண்டு  பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தின் மூலமாக் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ரஜினிகாந்துடனான அவரது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.

```
```

அதையடுத்து அஜித்தின் வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்தார். படத்தில் அவரின் ஆக்‌ஷன் காட்சி ஒன்று சிலாகிக்கப்பட்டது. தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.

தற்போது மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன.