Friday, May 3, 2024
Home > Cinema > குத்த வச்சி தர லோக்கலான போஸ் கொடுத்த ஹன்சிகா… இணையத்தில் வைரல் ஆகும் போட்டோஷூட்!

குத்த வச்சி தர லோக்கலான போஸ் கொடுத்த ஹன்சிகா… இணையத்தில் வைரல் ஆகும் போட்டோஷூட்!

2007 ஆம் ஆண்டு வெளியான “தேசமுதுரு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக  அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தமிழில் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து முக்கிய முண்ணனி நடிகையாக வளம் வந்தார். குஷ்பு போல பூசிய உடல்வாகோடு இருந்ததால் சின்ன குஷ்பு எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

ஆனால் சினிமாவில் அவர் தன் திறமையை வெளிப்படுத்தும் வேடங்களில் நடிக்க முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முன்னணி ஹீரோக்களோடு ஆடிப்பாடும் சாதாரண வேடங்களையே அதிகளவில் நடித்தார்.

`

அதனால் ஒரு கட்டத்துக்கு மேல்  அவருக்கு வாய்ப்புகல் இல்லை. நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல நடிகைகள் இருப்பதில்லை. குறிப்பாக சில நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.இந்த மாதிரி பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்த நிலை ஹன்சிகாவுக்கும் ஏற்பட்டது.

```
```

தற்போது அவர் கைவசம் தமிழ் உள்பட எந்த மொழிகளிலும் பெரிதாக படங்கள் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்புவுடன் காதல் என பல்வேறு கிசு கிசு போய் கொண்டிருந்தது. இந்நிலையில் இப்போது ஹன்சிகா திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக உள்ளார்.

தொழிலதிபரும் ஹன்சிகாவின் நீண்ட நாள் நண்பருமான சோஹைல் கதூரி என்பவரை டிசம்பர் 4 ஆம் தேதி ஹன்சிகா திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்து வரும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.