Wednesday, December 17, 2025
Home > Cinema > கண்கவர் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த பிரிகிடா சஹா..!

கண்கவர் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த பிரிகிடா சஹா..!

யுட்யூப்பில் ஆஹா கல்யாணம் என்ற தொடரில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இளைஞர்களைக் கவரும் விதமாக உருவாக்கப்பட்டு இருந்த இந்த தொடர் குறிப்பாக 2கே கிட்ஸ் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அதன் பின்னர் அயோக்யா, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துத் தலைகாட்டியவர் எப்போது ஹீரோயினாக நடிப்பார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.

பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் திரைப்படத்தில் துணை இயக்குனராக பணிபுரிய சென்ற இவர், அந்த படத்தில் சிலக்கம்மா என்ற வேடத்தில் நடித்தார். அந்த படத்தில் ஒரு காட்சியில் ஆடைகள் இன்றி அவர் நடித்துள்ளதாக சொல்லி இயக்குனர் பார்த்திபன் பரபரப்பைக் கிளப்பினார்.

ஆனால் அந்தக் காட்சிகளில் ஒன்றும் இல்லாமல் ரசிகர்கள் ஏமாந்தனர். இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்துவாரா இல்லை இயக்கத்தில் கவனம் செலுத்துவாரா என்ற கேள்வி எழுந்தது.

இப்போது கருடன் மற்றும் கோழிப் பண்ணை செல்லதுரை ஆகிய படங்களில் நடித்துள்ள அவர் சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.