Thursday, June 4, 2026
Home > Cinema > ஆஹா செம்ம க்யூட் & shape-u … கண்ணை இழுக்கும் அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

ஆஹா செம்ம க்யூட் & shape-u … கண்ணை இழுக்கும் அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

நடிகை அதுல்யா ரவி,  1994 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு  கல்லூரி படிப்பை கோயம்புத்தூரில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் முடித்தார்.

பின்னர் இவர் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் தேடி வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் மிகவும் ஆர்வமாக இயங்கிய இவருக்கு பாலோயர்ஸ் எண்ணிக்கை அதிகமானது.

தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் இவர் பால்வாடி காதல் என்ற குறும்படத்தில் நடித்திருந்தார்.

இதன் மூலம் படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெற்றார். பின்னர் இவர் கதாநாயகன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ஏமாளி என்ற படத்தில் நடித்திருந்தார்.

பின்னர் சுட்டு பிடிக்க உத்தரவு, நாகேஷ் திரையரங்கம்,நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, என் பெயர் ஆனந்தன் போன்ற படங்களில் நடித்து வந்துள்ளார்.இவர் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான கேப்மாரி படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார். கடைசியாக சாந்தணுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் மற்றும் சிபிராஜோடு வட்டம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில் அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு உருவ அமைப்பை மாற்றிக் கொண்டுள்ளதாக சர்ச்சைகள் கிளம்ப, அதை மறுத்திருந்தார். ஆனால் அவரின் பழைய புகைப்படங்களுக்கும் தற்போதைய புகைப்படங்களுக்கும் இடையே நல்ல வேறுபாடு தெரிந்து வருகிறது.