அபர்ணா 10 செப்டம்பர் 1995 இல் ஓமன், மஸ்கட்டில் குடியேறிய மலையாளி பெற்றோருக்கு பிறந்தார். அவர் தனது ஆரம்பக் கல்வியை நென்மாராவில் உள்ள கங்கோத்ரி ஆங்கில வழிப் பள்ளியிலும், இந்தியன் பள்ளி, தர்சைத்திலும் முடித்தார். கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டம் பெற்றவர்

முதுகலை பட்டப்படிப்பை முடித்த பிறகு, அவர் ஒரு கணக்காளராக பணியாற்றினார். அவர் தனது படிப்பின் போதும் அதற்குப் பிறகும் நிறுவனங்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு மாடலாகவும் பணியாற்றினார்

வணிக நிர்வாகத்தில் முதுகலை முடித்த பிறகு மஸ்கட்டில் பணிபுரியும் போது, அபர்ணா தனது டிக்டாக் வீடியோக்களில் ஒன்றைப் பார்த்த பிறகு, சத்யன் அந்திகாட்டின் நையாண்டி நகைச்சுவைத் திரைப்படமான நான் பிரகாஷனில் (2018) நடித்தார், இதனால் அவர் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.[3] பின்னர் அவர் வினீத் ஸ்ரீனிவாசனுக்கு ஜோடியாக மனோகரம் (2019) படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

தமிழில் அபர்ணாவுக்கு அறிமுகமாக அமைந்தது பீஸ்ட் திரைப்படம். அந்த படத்தின் ஒன்று ரிலீஸ் ஆன போதே, அதிலிருந்த பூஜா ஹெக்டேவை விட இவருக்குதான் ஃபயர்கள் பறந்தன. படத்திலும் அவருக்கு ஒரு சிறிய வேடம் என்றாலும், அதில் சிறப்பாக நடித்திருந்தார்.

அதன் பின்னர் இந்த ஆண்டில் அவர் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதில் அவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் நல்ல பாராட்டுகளை பெற்ற நிலையில் முன்னணி நடிகைகளில் ஒருவராகியுள்ளார்.

இந்நிலையில் இப்போது சமூக வலைதளங்களில் அவரைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ள நிலையில் வெள்ளை நிற சேலை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

