Tuesday, April 22, 2025
Home > Cinema > இன்னைக்கு இண்டர்நெட்ல அதிகம் பகிரப்பட்ட புகைப்படம் இதுதான்… க்யூட் ஷாலினி & அஜித் கப்பிள்!

இன்னைக்கு இண்டர்நெட்ல அதிகம் பகிரப்பட்ட புகைப்படம் இதுதான்… க்யூட் ஷாலினி & அஜித் கப்பிள்!

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளில் ஷாலினி மற்றும் அஜித் தம்பதிகளும் ஒருவர். இவர்கள் அமர்க்களம் படத்தில் நடிக்கும் போது காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளார்.

தமிழ் சினிமாவில் வெகு சில படங்களில் மட்டுமே நடித்தாலும் திறமையான நடிகை என பெயரெடுத்தவர் ஷாலினி. காதலுக்கு மரியாதை, அமர்க்களம் மற்றும் அலைபாயுதே ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

`

திருமணத்துக்குப் பிறகு ஷாலினி நடிப்பிற்கு விடைகொடுத்து, பேட்மிண்டன் விளையாட்டு போன்றவற்றில் ஆர்வம் காட்டிவந்தார். கடந்த சில ஆண்டுகளாக அஜித் சமூகவலைதளங்கள், பொதுத் தளங்களில் தலைகாட்டுவதில்லை.

```
```

இந்நிலையில் இப்போது அஜித் குடும்பத்தில் இருந்து அவரின் மனைவி ஷாலினி அஜித் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தோடு அவர் தன்னுடைய முதல் பதிவை பகிர, கிட்டத்தட்ட ஒரு லட்சம் பாலோயர்ஸ்கள் அவரை பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.

இதையடுத்து இப்போது, ஷாலினி மற்றும் அஜித் இருவரும் கட்டியணைத்து ரொமாண்டிக்காக கொடுத்துள்ள போஸ் இணையத்தில் தீயெனப் பரவி, வைரல் ஆகி வருகிறது.