Sunday, April 19, 2026
Home > Cinema > எங்கள் விவாகரத்துக்குக் காரணமே அந்த இசையமைப்பாளர்தான்… சிறுத்தை சிவா தம்பி புலம்பல்!

எங்கள் விவாகரத்துக்குக் காரணமே அந்த இசையமைப்பாளர்தான்… சிறுத்தை சிவா தம்பி புலம்பல்!

இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் சிவாவின் தம்பி பாலா. இவர் அன்பு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் அவருக்கு மலையாள திரைப்படங்களில் அதிக வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.

அதனால் அங்கு செட்டில் ஆன அவர் பாடகியான அம்ருதம் கமயா என்பவரைக் காதலித்து 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் விவாகரத்து செய்தனர்.

பாலா வும் அம்ருதமும் அதன் பிறகு இரண்டாவது திருமணம் செய்துகொண்டனர். அம்ருதம் மலையாள சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான கோபி சுந்தரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அம்ருதம் பாலாவோடு திருமணத்தில் இருக்கும் போதே அவர் கோபி சுந்தரோடு கள்ள உறவில் இருந்ததாகக் குற்றச்சாட்டை இப்போது பாலா வைத்துள்ளார்.

அதில் “எங்கள் விவாகரத்துக்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர்தான் காரணம். இதுபற்றி நான் பொதுவெளியில் பேச விரும்பவில்லை. ஏனென்றால் அது என் மகளின் எதிர்காலத்தைப் பாதிக்கும்” எனக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவிலும் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு முன்னணி இசையமைப்பாளர் இதுபோல ஒரு முன்னணி நடிகர் மீது இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.