சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் அபர்னா பாலமுரளி.

மலையாளத்தில் வெளியான மகேஷிண்டே பிரதிகாரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அபர்னா பாலமுரளி. அந்த படத்தின் வெற்றியால் முன்னணி நடிகையானார்.

அதன் பின்னர் தமிழில் சர்வம் தாளமயம், சூரரைப் போற்று மற்றும் வீட்ல விசேஷம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் சூரரைப் போற்று திரைப்படத்தில் அவர் நடித்த பொம்மி கதாபாத்திரம் பரவலாக பாராட்டுகளைப் பெற்றது. அந்த படத்துக்கு 6க்கும் மேற்பட்ட தேசிய விருதுகள் கிடைத்தன.

இதுவரை ஹோம்லி கதாபாத்திரங்களாகவே நடித்து வந்த அபர்னா பாலமுரளி, இப்போது கிளாமராக வெளியிட்டுள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. வெள்ளை உடையில் மெழுகு டால் போல இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களைப் பெரிய அளவில் கவர்ந்துள்ளன.


