Saturday, May 2, 2026
Home > Cinema > குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினாரா எதிர்நீச்சல் மதுமிதா!! முழு விவரம் !! வீடியோ வெளியிட்டு விளக்கம்!

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினாரா எதிர்நீச்சல் மதுமிதா!! முழு விவரம் !! வீடியோ வெளியிட்டு விளக்கம்!

தமிழ் தொலைக்காட்சிகளை இப்போது பெரியளவில் சீரியல்கள் ஆக்கிரமித்துவிட்டன. சீரியல்களின் ஆதிக்கத்தால் இப்போதெல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட ஸ்பெஷல் எபிசோட்கள் ஒளிபரப்ப ஆரம்பித்து விட்டனர். அந்த அளவுக்கு தமிழ் நாட்டு பெண்கள் சீரியல்களை ஆர்வமாக பார்க்கின்றனர்.

ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பானாலும், சில சீரியல்கள்தான் ரசிகர்களைக் கவர்ந்து வெற்றிக் கொடி நாட்டுகின்றன. அப்படி மக்களால் அதிகளவில் பார்க்கப்படும் சீரியல்களில் ஒன்று எதிர் நீச்சல் சீரியல். இந்த சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடிகை மதுமிதா நடித்து வருகிறார். அந்த சீரியலின் ஆணாதிக்கவாத ஆதி குணசேகரனை எதிர்த்து அவர் தன்னுடைய உரிமைக்காக போராடுவது இளம் பெண்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதனால் மதுமிதாவுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சோழிங்கநல்லூர் பகுதியில் தனது தோழர் ஒருவரோடு காரில் சென்ற போது எதிரே வந்த ரவிக்குமார் என்ற போலீஸ் காவலர் மீது அவரின் சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து ஏற்படக் காரணம் மதுமிதா ஓட்டிச்சென்ற கார் தவறான ஒருவழிச் சாலையில் சென்றதுதான் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து காயமடைந்த காவலர் ரவிக்குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். இந்த விபத்தின் போது மதுமிதா குடித்துவிட்டு வண்டி ஓட்டியதாக சர்ச்சைகள் கிளம்பின. இதையடுத்து காவலர் ரவிக்குமாரின் அண்ணன் ராம்குமார் அளித்த புகாரின் பேரில் மதுமிதா மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில் அவர் குடிபோதையில் இல்லை என்பது சோதனையில் உறுதியாக தெரிந்துள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

அதுபோல அவரின் காரை பறிமுதல் செய்து உரிய ஆவணங்கள் மற்றும் வண்டி ஓட்டத்தகுந்த வகையில் உள்ளதா என சோதனை செய்யப்பட்டுள்ளது. அனைத்தும் சரியாக இருந்ததால் அவரிடம் மீண்டும் காரை ஒப்படைத்துள்ளனர். இது சம்மந்தமான வழக்கு நடக்கும் போது மதுமிதா நீதிமன்றம் அறிவிக்கும் அபராதத்தைக் கட்டவேண்டி இருக்கும் என சொல்லப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலர் ரவிக்குமாரும் இப்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் எதிர் நீச்சல் மதுமிதா வெளியிட்டுள்ள வீடியோவில் “ “ ஹாய் கைஸ், நான் இந்த வீடியோவை ஒரு ரூமரை க்ளிடர் பண்ணுவதற்காக வெளியிடுகிறேன். சில நாட்களாக  எல்லா மீடியாக்களிலும், யுடியூப் சேனல்களிலும் நான் குடித்துவிட்டு கார் ஓட்டி ஒரு போலீஸ்காரர் மேல் மோதி விட்டதாகவும், அந்த போலீஸ் காரர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. முதலில் நான் குடிக்கவில்லை. ஆனால் சிறு விபத்து நடந்தது உண்மைதான். அந்த போலீஸ்காரர் இப்போது நன்றாக இருக்கிறார். நானும் நன்றாக இருக்கிறேன். அதனால் இதுபோன்ற வதந்திகளை நம்பாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.